எந்த உடல் வாகிற்கு எந்த மேக்ஸி ஆடை பொருந்தும் - இதோ கம்ப்ளீட் கைடு.

இன்று மேக்ஸி ரக ஆடைகள் இளம்பெண்கள் இடையே பிரபலமாகியுள்ளது.

சிலர் வார்ட்ரோபில் தூங்கும் சேலைகளை கூட மேக்ஸி டிரஸ்களாக மாற்றி தினசரிப் பயன்பாட்டுக்கு வைத்துக்கொள்கின்றனர்.

உடலமைப்பைப் பொறுத்தவரை ஐந்து வகைகளை சொல்வார்கள்.

ஆப்பிள் வடிவம், பேரிக்காய் வடிவம், செவ்வகம், மணல் கடிகாரம், தலைகீழ் முக்கோணம் என பிரித்துள்ளனர்.

இந்த வடிவங்கள் மார்பளவு, இடுப்பளவு வைத்து வகைப்படுத்தப்பட்டுள்ளது.

ஆப்பிள் உடல் வகை கொண்டவர்களுக்கு ராப் மேக்ஸி (wrap maxi) ஒரு நல்ல தேர்வு.

பேரிக்காய் வடிவ பெண்களுக்கு பெரிய, பஃப் ஸ்லீவ் இருக்கும் கிமோனோ ஸ்டைல் மேக்ஸிகளை தேர்வு செய்யலாம்.

செவ்வக வடிவ உடலுக்கு இடுப்பை அழுந்தப் பிடித்து மேலேயும், கீழேயும் விரிந்து செல்லும் ராப் மேக்ஸி (Wrap Maxi) அணியலாம்.

மணல் கடிகாரம் போன்று குறுகிய இடுப்பு கொண்ட பெண்கள் தாங்கள் விரும்பும் எந்த மேக்ஸி உடையையும் அணியலாம்.