உறவுகளுக்குள் இடைவெளி ஏன் அவசியம்?

உறவுகளில் இடைவெளி (ஸ்பேஸ்) என்பது மிகவும் முக்கியமானது.

கருத்து மோதல், வாக்குவாதத்துக்கு பின் எண்ணங்களை ஒன்றிணைக்க, தனிப்பட்ட உணர்வுகளைத் தொடர, உறவில் தனித்துவத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க இடைவெளி உதவும்.

துணையை மட்டுமே சார்ந்திருப்பதைத் தவிர்க்கவும் இது உதவுவதால், சிக்கல்கள் இன்றி எப்படி இடைவெளி எடுத்து கொள்வது, துணையின் தேவையை மதிப்பது என பார்க்கலாம்.

உங்கள் துணை தனக்குத்தானே சமாதானமாக இடைவெளி தேவை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். சிறிது அவகாசமளித்து அவர்களின் விருப்பத்தையும் மதிக்க வேண்டும்.

விரும்பும் நேரத்தையும், இடைவெளியை பற்றி ஒருவருக்கொருவர் தெளிவுபடுத்தும் போது, எந்த குழப்பமுமின்றி நமது எதிர்பார்ப்புகளைத் திட்டமிடலாம்.

நபருக்கு நபர் இடைவெளி குறித்த கருத்து மாறுபடலாம். எனவே, உங்களுடைய மற்றும் துணையின் யோசனை குறித்து விவாதிப்பது முக்கியம்.

உங்கள் துணைக்கு இடைவெளி தேவை என அறிந்தவுடன், அவர்களின் விருப்பங்களை மதிக்க வேண்டும் மற்றும் தொந்தரவு செய்ய முயற்சிக்கக்கூடாது.

துணை இடைவெளியை கேட்கும் நேரத்தில், நமக்கு மகிழ்ச்சியைத் தரும் விஷயங்களைச் செய்வதன் மூலம் நம்மை நாமே பிஸியாக வைத்திருக்க முயற்சிக்க வேண்டும்.

உங்கள் துணைக்கு இடைவெளி கொடுக்க ஒப்பு கொண்ட பின், அவருடன் எவ்வித தொடர்பையும் ஏற்படுத்துவதை தவிர்க்கவும்.

ஒரு சில நேரங்களில் இடைவெளியை சமாளிப்பது கடினமாக இருக்கும். அப்போது, உரையாடல்கள் குறித்து திட்டமிட்டால் குழப்பம் குறைந்து மன அமைதி கிடைக்கும்.