எடைகுறைப்பு முயற்சி சிலருக்கு பலன் தராதது ஏன்?

ஒரு சிலர் பருமனான உடல் எடையை குறைக்க பல்வேறு விதமாக முயற்சித்தாலும் சரிவர பலன் கிடைக்காது. எனவே, எடைக்குறைப்பு என்பது அவர்களுக்கு சவாலாகவே இருக்கும்.

ஆரோக்கியமானது என்ற எண்ணத்தில் ஒருசில உணவுகளை அளவுக்கு அதிகமாக எடுக்கும்போது உடல் எடை குறைய வாய்ப்பிருக்காது. எனவே, குறிப்பிட்ட அளவே எடுக்க வேண்டும்.

உதாரணமாக, ஒரு நாளைக்கு நிறைய பழங்களை சாப்பிடுவது கலோரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடும்.

அதேப்போல், பாதாம், பிஸ்தா, வால்நட் போன்றவற்றை கைப்பிடி அளவு எடுக்கும்போது, இதில் கொழுப்பும் அதிகம், புரதச்சத்தும் அதிகம்.

புரோட்டீன் ஷேக், ஜூஸ் போன்றவற்றை அதிகம் குடிக்கும்போது, அதில் சர்க்கரை அளவு அதிகமிருக்கும். பல உணவுகளில் ஃப்ரக்டோஸ், மால்டோஸ், சுக்ரோஸ் போன்ற மறைமுக சர்க்கரை அதிகமிருக்கும்.

எனவே உணவுப்பொருள்களை வாங்கும்போது அவற்றின் லேபிளை சரிபார்த்து வாங்கினால் அளவுக்கதிகமாக சர்க்கரை சேராமல் பார்த்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் இடையே ஏதாவது சாப்பிடும் பழக்கம் இருந்தால் முடிந்தளவு அதைத் தவிர்க்க வேண்டும். இது அனைவருக்கும் உகந்தது அல்லது; டாக்டரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.

இவற்றை சரிவர கவனித்து வந்தாலே எங்கே தவறு நடக்கிறது என கண்டுபிடித்து சரிசெய்தால் எடைகுறைப்பு முயற்சி பலனளிக்கும்.