கல்விக்கடனை முன் கூட்டியே அடைத்தால் கிரெடிட் ஸ்கோர் குறையுமா?
தங்கள் மகன் அல்லது மகளின் கல்விக்கடனுக்கான வாங்கிய தொகையை, ஒருசிலர் முழுமையாக திருப்பிச் செலுத்த நினைப்பர்.
அப்போது, மொத்த பணத்தையும் செலுத்தும்போது, கிரெடிட் ஸ்கோரில் பாதிப்பை ஏற்படுத்துமோ, எனவே, மெல்ல மெல்ல கடனை அடைக்கலாமே என சந்தேகமும் கூடவே எழும்.
ஆனால், கல்விக்கடனை மொத்தமாக திரும்பிச் செலுத்தும் போது, கிரெடிட் ஸ்கோரில் பாதிப்பு உண்டாகாது.
நீங்கள் மொத்த கல்விக்கடனையும் திருப்பி செலுத்தி, கடன் கணக்கை 'குளோஸ்டு' என சான்றிதழ் வாங்கினால் போதும்.
அந்த விபரத்தை தான் அந்த வங்கி, கிரெடிட் ஸ்கோர் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கும்.
அவர்கள் இதனை நேர்மறையாகவே எடுத்துக்கொள்வர்.
எனவே, எந்த வகையிலும், அது உங்களுடைய அல்லது உங்களுடைய மகன், மகளுடைய கிரெடிட் ஸ்கோரை பாதிக்காது.