சாகசப் பிரியர்களுக்கு உலகின் மிகவும் திகிலான இடங்கள்!

கனடாவின் டொராண்டோவில் சிஎன் கோபுரத்தின் உச்சியில் அமைந்திருக்கும் எட்ஜ்வாக், உரிய பாதுகாப்புடன் தரையில் இருந்து 356 மீ உயரத்தில் நிற்கும்போது, சாகசத்தின் விளிம்பில் இருக்கலாம்.

அமெரிக்காவின் கிராண்ட் கேன்யன் ஸ்கைவாக்... பள்ளத்தாக்கின் விளிம்பை தாண்டி 21 மீ., நீண்டுள்ள கண்ணாடி பாலத்தில் இயற்கை அழகை ரசிப்பது மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கிறது.

ஆஸ்திரேலியாவில் உள்ள குரோகோசரஸ் கோவ்வில் நீங்கள் தைரியசாலிகளாக இருந்தால் முதலைகளை நேருக்கு நேர் சந்திக்கலாம். அதுவும் அருகிலேயே... ஆனால் பாதுகாப்பாக அக்ரலிக் உறைக்குள்...

சீனாவின் ஷாங்சி மாகாணத்தில் அமைந்திருக்கும், ஹுவாஷான் மலையின் செங்குத்தான பாறைகளின் வழியே, மர பலகையின் மீது, சங்கிலியை பிடித்துக் கொண்டே நடப்பது சாகசமான ஒன்றாகும்.

ட்ரோல்துங்கா, நார்வே... ஏரிக்கு மேலே 700 மீ., தூரத்தில் பள்ளத்தாக்கில் நிற்பது பிரமிக்க வைக்கும். இதற்கு கரடு முரடான பாதையில் டிரெகிங் செய்ய வேண்டும்.

நியூசிலாந்தின் குயின்ஸ்டவுன் அருகே அமைந்துள்ள நெவிஸ் பங்கி, உலகின் மிக உயரமான பங்கி ஜம்ப்களில் ஒன்றாகும்.

எரிமலை போர்டிங், செரோ நீக்ரோ, நிகரகுவா... இங்கு சாம்பல் படர்ந்த சரிவுகளில் இறங்கும்போது 80 கிமீ வேகத்தில் சாகசத்தின் விளிம்புக்கே அழைத்துச் செல்லும்.

பாரிஸில் மில்லியன் கணக்கான எலும்புக்கூடுகளின் இருப்பிடமான கேடாகம்பஸ் வினோதமான இடமாகும். பல நூற்றாண்டுகள் பழமையான எலும்புகளால் நிரப்பப்பட்ட மங்கலான அறைகள் திக் உணர்வை அளிக்கும்.