நீரின்றி அமையாது உலகு : உலக தண்ணீர் தினம் இன்று!
தண்ணீர் சேமிப்பு, பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 1993 முதல் மார்ச் 22ல் உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
பூமியில் 70 சதவீதம் நீர்பரப்பு தான். ஆனால் இதில் 97.5 சதவீதம் கடலில் இருக்கும் உப்பு நீர். மீதியுள்ள 2.5 சதவீத அளவிற்கே நிலத்தடிநீர் உள்ளது.
இதிலும் ஒரு சதவீதம் தான் குடிப்பதற்கு ஏற்றது. எனவே நிலத்தடி நீரை சேமிப்பதற்கு அனைவரும் முயற்சிக்க வேண்டும்.
உலக தண்ணீர் தினம் நீரின் நிலையான மேலாண்மைக்கு தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலக நீர் தினத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, வருகிற 2030-ம் ஆண்டுக்குள் உலக மக்கள் அனைவருக்கும் தரமான நீர் மற்றும் சுகாதாரத்தை வழங்குவதாகும்.
"அமைதிக்கான நீர்" என்பது 2024ம் ஆண்டிற்காக முன்மொழியப்பட்ட உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளாகும்.
கடந்த சில நாட்களாக பெங்களூருவில் நிலவி வரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு சர்வதேச செய்திகளை உருவாக்கி வருகிறது.
தண்ணீர் தினத்தில், நாம் அனைவரும் நீர் சேமிப்பிற்காக ஒன்றுபட்டு, நிலையான மற்றும் வளமான நாளைக்கான அடித்தளத்தை அமைக்க வேண்டும்.