மக்கும் உரக் கலவையை இனி எளிதாகத் தயாரிக்கலாம்...!
மக்கும் உரம் தயாரிக்க சிறியளவில் இடம், தொட்டி இருந்தாலே ஒரு வீட்டின் தோட்டத்திற்கு தேவையான உரம் கிடைக்கும்.
அடுக்குமாடியில் குடியிருப்போர் மண்புழு உரத் தொட்டிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
உரத்திற்குத் தேவையான காற்றோட்டத்திற்காக முதலில் பழுப்பு நிற பெரிய கழிவுகளை அடியில் பரப்ப வேண்டும்.
பிறகு மென்மையான பச்சை மற்றும் பழுப்பு நிற கழிவுகள் ஒன்றன்பின் ஒன்றாகப் போட வேண்டும்.
பெரும்பாலும் பச்சை நிற கழிவுகளை சிறிய துண்டுகளாக நறுக்கிச் சேர்க்கும் போது, துர்நாற்றம் வெளியாவதைத் தடுக்கு முடியும்.
உரக்குவியல் என்பது பிழிந்தெடுத்த பஞ்சு போல, ஈரப்பதமாக இருக்க வேண்டும், ஆனால் நீர் வடியக்கூடாது. உரக்குவியல் காய்ந்துவிட்டால் தண்ணீர் சேர்க்க வேண்டும்.
குழைந்துவிட்டால் மேலும் உரத்தைச் சேர்க்கவும். ஒவ்வொரு வாரமும் அல்லது இரண்டு வாரங்களுக்கும் ஒருமுறை முள்கரண்டியால் குவியலைக் கிளறிவிடவும்.
இது உரத்திற்கு தேவையான ஆக்சிஜனைச் சேர்ப்பதோடு, நுண்ணுயிரிகளைச் சுறுசுறுப்பாக வைத்து, மக்கும் செயல்முறையை வேகப்படுத்தும்.
ஊட்டச்சத்து நிறைந்த மக்கும் உரம் இரண்டு முதல் ஆறு மாதங்களுக்குள், குவியலின் அடிப்பகுதி கருமையான நிறத்துடனும், எளிதில் உடையக்கூடிய தன்மையுடனும் இருக்கும்.
இவை மண் போன்ற நறுமணத்துடனும் மாறும் போது தரமான மக்கும் உரம் கிடைக்கும்.