ரத்தத்துடன் மலம்: உடலில் கொலஸ்ட்ரால் கூடி இருப்பதற்கான அறிகுறி!

ரத்தத்தில் அதிகளவு கொழுப்பு மூலக்கூறுகள் இருப்பதால் அதிக கொலஸ்ட்ரால் ஏற்படுகிறது.

இந்தக் கொழுப்பு இதயத்தில் இருந்து பிறகு உறுப்புகளுக்கு செல்லும் ரத்த குழாய்களில் படிந்து,ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுத்துகிறது.

இதனால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற கடுமையான பாதிப்புகள் உண்டாகினறன.

உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதை பரிசோதனையின்றி பல அறிகுறிகள் நமக்கு காட்டும்.தற்போது அதில் ரத்தத்துடன் மலம் கழிப்பதும் ஒரு அறிகுறி என கண்டறியப்பட்டுள்ளது.

கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது குடலுக்கு செல்லும் ரத்த குழாய்களையும் சுருக்குகிறது. இதனால் குடல், மண்ணீரல் மற்றும் கல்லீரலுக்கான ரத்த சப்ளை பாதிக்கப்படலாம்.

மலக்குடலுக்கான ரத்த ஓட்டம் தடைப்படும் போது புற தமனி நோய் ஏற்படும்.

அடிக்கடி மலம் கழிக்கத் தோன்றுவது மற்றும் கடினமாக மலம் கழிப்பது ஆகியவையும், அதிக கொலஸ்ட்ரால் மலக்குடலுக்கான ரத்தப் போக்கை தடுக்கிறது.