பேஷன் விழாவில் கலக்கிய ஸ்ரேயா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா. 'எனக்கு 20 உனக்கு 18' படத்தில் அறிமுகமானாலும், ஜெயம் ரவியின் மழை படத்தின் மூலம் பிரபலமானார்.
தொடர்ந்து, விஜய், விக்ரம் மற்றும் ரஜினிகாந்த் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த ஸ்ரேயா, மார்க்கெட் இழந்த நிலையில் கடந்த 2018ல் திருமணமாகி செட்டிலானார்.
ஒரு பெண்குழந்தை உள்ள நிலையில் தற்போது சோஷியல் மீடியாவில் உற்சாகமுடன் புகைப்படம், வீடியோக்களை அடிக்கடி பதிவிடுகிறார்.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின்னர் மும்பையில் நடந்த பி.டி.எஃப்.டபிள்யூ., பேஷன் விழாவில் பங்கேற்று 'ஷோ டாப்பர்' ஆக உற்சாக நடைபோட்டுள்ளார்.
பூக்களின் அழகை வெளிப்படுத்தும் தொகுப்பான 'லீலா' என்ற அழகிய கவுன் உடையில் ஸ்ரேயா வலம் வந்தார்.
உடைக்கேற்ப ஜொலிக்கும் வைரம் மற்றும் மரகதக் கற்கள் பதிக்கப்பட்ட நகைகளை அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.