மாய்ச்சரைசரில் கவனம்... முகத்தில் எண்ணெய் வழிய காரணம் இதுதான் !
முகத்தில் மாய்ச்சரைசர் பயன்படுத்திய பிறகு, சிலருக்கு எண்ணெய் வழிவது போலவும், ஒருவிதமான பிசுபிசுப்பு தன்மையுடனும் மாறிவிடுகிறது.
இதன் காரணமாகவே, சருமத்திற்கு மிக அவசியமான மாய்ச்சரைசர் பயன்படுத்துவதை பலர் தவிர்த்து விடுகிறார்கள்.
ஆனால், மாய்ச்சரைசர் பயன்படுத்துவதில் ஒரு முக்கியமான நுணுக்கம் ஒளிந்துள்ளது என்பது பியூட்டீசியன்களின் கருத்தாகும்.
பொதுவாக நாம் எந்த ஒரு கிரீமாக இருந்தாலும், அதை முதலில் உள்ளங்கையில் எடுத்து வைத்துக்கொண்டு, பிறகு முகம் முழுவதும் தேய்ப்போம்.
இது முற்றிலும் தவறான முறை. இப்படி செய்வதால்தான் முகத்தில் அதிக எண்ணெய் வழிவது போல தோன்றும்.
கிரீமை உள்ளங்கையில் எடுக்காமல், உங்கள் விரல் நுனியில் சிறிதளவு மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.
முகத்தில் கிரீமை வைத்து அழுத்தி தேய்க்கக் கூடாது. மாறாக, விரல் நுனியால் முகத்தில் மென்மையாக தொட்டு பரப்ப (Dab/Pat) வேண்டும்.
கிரீமை போட்டு அழுத்தி தேய்ப்பதால், அதன் தன்மையும் பலனும் மாறிவிடும். எனவே, மென்மையாக கையாளுவதே சிறந்தது.
மாய்ச்சரைசருக்கு அடுத்ததாக, சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும். இதையும் மாய்ச்சரைசர் போலவே விரல் நுனியில் எடுத்து மென்மையாகப் பயன்படுத்த வேண்டும்.
அப்போதுதான், வெயிலில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதோடு, முகம் பொலிவாகவும் எண்ணெய் பிசுபிசுப்பு இல்லாமலும் இருக்கும்.