அடிப்படை பரிசோதனை... முதுமையில் கட்டாயம் தேவை !

'எனக்கெல்லாம் ஒன்னும் வராது, திடமாகத்தான் இருக்கேன்' என்ற நம்பிக்கையில் பலர் அடிப்படை பரிசோதனைகளை செய்ய தவறிவிடுகின்றனர்.

பலரின் திடீர் இறப்புகளுக்கு இதுவே முக்கிய காரணமாக அமைந்துவிடும் என்பது டாக்டர்களின் எச்சரிக்கையாகும்.

முதுமையில் அபாய கட்டத்தில் சிகிச்சைக்கு செல்லும் பலரும் நீரிழிவு, கொழுப்பு, மற்றும் ரத்த அழுத்தம் சார்ந்த பரிசோதனையை வாழ்நாளில் செய்து கொண்டதில்லை.

பரிசோதனை செய்யாமலேயே ஒன்றும் இல்லை என முடிவு செய்துவிடக்கூடாது. எந்த ஒரு வியாதியும், பாதிப்பும் உடலில் திடீரென்று வருவதில்லை.

30 - 40 வயதுக்கு மேல் நல்ல ஆரோக்கியமாகவே இருந்தாலும் நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு உள்ளிட்ட பரிசோதனைகளை கட்டாயம் செய்ய வேண்டும்.

பரம்பரையில் இப்பாதிப்பு இருப்பவர்கள் பரிசோதனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

குறிப்பாக, 50 - 60 வயதை கடந்தவர்கள் அடிப்படை பரிசோதனைகள் மட்டுமின்றி, முழு உடல் பரிசோதனையும் ஆண்டுக்கு ஒரு முறை செய்ய வேண்டும்.

பாதிப்பு உள்ளவர்கள் அதற்கேற்ப தேவையான பரிசோதனைகளை, மருத்துவர் அறிவுரையின் பேரில் அடிக்கடி செய்து கொள்ள வேண்டும்.

பெண்கள், அடிப்படை பரிசோதனைகளுடன் மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சார்ந்த பரிசோதனைகளையும் மேற்கொள்வது அவசியம்.

நீண்ட நாட்கள் இருக்கும் கால், கை உள்ளிட்ட உடல் சார்ந்த வலிகள், கட்டிகள், திடீரென்று உடலில் ஏற்படும் மாற்றங்கள் எதையும் அலட்சியமாக விடக்கூடாது.