கோடை கால அழகு பராமரிப்புகள் சில!

வெயில் காலத்தில், வியர்வையால் பொடுகு தொல்லை ஏற்படும். அதற்கு, வாரம் மூன்று முறை, ஆயில் மசாஜ் செய்து, தலைக்கு குளிக்க வேண்டும்.

விளக்கெண்ணெயும், ஆலிவ் எண்ணெயும் ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் கலந்து, சூடு செய்து, மசாஜ் செய்யலாம்.

வியர்வை நாற்றத்தை தவிர்க்க, கைப்பிடி அளவு கல் உப்பை, தண்ணீரில் போட்டு குளிக்கலாம்.

வெயில் காலத்தில், கடலை மாவிற்கு பதில், பயித்த மாவு போட்டு குளியுங்கள்.

தவிர்க்க முடியாதபடி, சில நேரங்களில் ஷூ அணிய நேர்ந்தால், கால்களுக்கான, 'புட் பவுடர்' போட்டு, பின் சாக்ஸ் போட்டு, ஷூ அணிந்தால், அவ்வளவாக வியர்க்காது.

பருத் தொல்லையால் அவதிப்படுவோர், வேப்பிலைச்சாறு எடுத்து, மூன்று முறை தினமும் தடவினால்பரு பிரச்னையிலிருந்து விடுதலை கிடைக்கும்.

வெயில் காலத்தில், நம் உடம்பில் இருக்கும் உப்பு, வியர்வையின் காரணமாக, அதிகமாக வெளியேறும்.

அதனால், மாதுளை, ஆரஞ்சு மற்றும் எலுமிச்சம் ஜூஸ் நிறைய குடியுங்கள். மேலும், கூழ் மற்றும் வெங்காயம் நிறைய எடுத்துக் கொள்ளுங்கள்.