ஆசைகளை வெல்பவனே தைரியமானவன்... அரிஸ்டாட்டிலின் தன்னம்பிக்கை வரிகள் !

தன் எதிரிகளை வெல்பவனை விட, தன் ஆசைகளை வெல்பவனே தைரியமானவன்.

அனுபவம் வாய்ந்த இளைஞர்கள் என யாருமே இல்லை. காலமே அனுபவத்தை உருவாக்குகிறது.

குறிப்பிட்ட ஏதாவது ஒரு இலக்கை அடைய முயற்சிக்கும்போது மட்டுமே வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும்.

புத்திசாலிகளைப் போல சிந்தியுங்கள், ஆனால் சாதாரண நபர்களைப் போல பேசுங்கள்.

கல்வியின் வேர்கள் கசப்பானவை, ஆனால் அதன் பழங்கள் இனிப்பானவை.

வலியின்றி நம்மால் எதுவுமே கற்றுக்கொள்ள முடியாது.

கீழ்ப்படியக் கற்றுக்கொள்ளாதவன் ஒரு நல்ல தலைவனாக இருக்க முடியாது.

கோபப்படுவது என்பது யாருக்கும் எளிது. ஆனால் சரியான நபர் மீது, சரியான அளவில், சரியான நேரத்தில், சரியான நோக்கத்துடன் கோபப்படுவது எல்லோருக்கும் வராது.

தைரியமே அனைத்து நல்லொழுக்கங்களுக்கும் தாய், ஏனெனில் அது இல்லாமல், நீங்கள் மற்றவற்றை தொடர்ந்து செய்ய முடியாது.