உலகம் முழுவதும் பிரபலமாகிவரும் கேமல் மில்க்...

ஒட்டகப் பாலில் டீ போடு... என்ற டயலாக் போல் இப்போது கேமல் மில்க் எனும் ஒட்டகப்பால் மிகவும் உலக அளவில் பிரபலமாகிவருகிறது

நமது நாட்டில் ரொம்ப நாட்களாகவே ராஜஸ்தான் போன்ற பாலைவனப்பகுதிகளில் இந்தப் பால் பயன்படுத்திவருகின்றனர். ஆனால் அது அவர்கள் அளவிலயே இருந்து வருகிறது.

ஆனால் அதன் மகத்துவம் குபீர் என அதிகரித்ததால் இப்போது ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, ஆசியாவின் பாலைவனப் பகுதிகளில் ஒட்டக வளர்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

இது ஒரு அருமையான ஊட்டச்சத்து பானமாக தற்போது மதிக்கப்படுகிறது. இது கேமல் மில்க் என்ற பெயரில் உலகம் முழுவதும் ஆரோக்கிய ஆர்வலர்களையும் கவர்ந்துவருகிறது.

இதில் லேக்டோஸ் குறைவாக உள்ளது. இதை குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக ஏற்படுவதாகவும். சர்க்கரை நிலையை கட்டுப்படுத்த உதவுவதாகவும் கூறப்படுகிறது.

இரும்புச் சத்து, கால்சியம் அதிகமாக இருக்கிறது இது எலும்பை உறுதியாக்குகிறது என்று கேமல் மில்க் பலன்களை சொல்லிக் கொண்டே போகின்றனர்.

கேமல் மில்க்கால் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம், சாக்லெட், பவுடர் பானங்களை தயாரித்துப்பட்டு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்படுகிறது.