பிளாக் செய்த செல்களை அன்-பிளாக் செய்யும் கேன்சர் சிகிச்சை

உணவுமுறை மாற்றம், சரிவர தாய்ப்பால் தராதது உட்பட பல்வேறு காரணங்களால் மார்பக கேன்சரால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மரபியல் காரணிகளால் வரும் 10 சதவீத கேன்சரை, மரபணு பரிசோதனை வாயிலாக முன்கூட்டியே கண்டறிய முடியும்.

40 வயதுக்கு மேல் எக்ஸ்-ரே மேமோகிராம், எம்.ஆர்.ஐ., அல்ட்ரா சவுண்டு என மார்பக கேன்சருக்கான பரிசோதனைக்கு பலமுறைகள் உள்ளன; சிறந்த முறை எக்ஸ்-ரே மேமோகிராம் தான்.

கடந்த 25 ஆண்டுகளாக கீமோ சிகிச்சை செய்வதில் இருந்து விலகி, எந்த மரபணுவால் கேன்சர் வந்தது என்பதை அறிந்து, அதை தாக்கி அழிக்கும் விதமாக 'டார்கெட்டெட் தெரபி' சிகிச்சை செய்யப்படுகிறது.

இதனால் குணப்படுத்தவே முடியாது என்று இருந்த லுகீமியா போன்ற பல கேன்சர்களை குணப்படுத்த முடிகிறது.

அடுத்தது, இம்மியூனோதெரபி. பல காரணங்களால் கேன்சர் உண்டாகும் போது, கேன்சர் திசுக்கள் சில புரதங்களை உருவாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை செயல்படவிடாமல் பிளாக் செய்கிறது.

புதிதாக வந்திருக்கும் இச்சிகிச்சை, பிளாக் செய்த நோய் எதிர்ப்பு செல்களை 'அன் பிளாக்' செய்து செயல்படாமல் இருந்த டி-செல்களை செயல்பட வைக்கிறது.

கேன்சர் செல்களை அழிக்கிறது. நம் எதிர்ப்பு சக்தியை 'பூஸ்ட்' செய்து கேன்சர் செல்களை அழிப்பது புதிய சிகிச்சை. பெரும்பாலான கேன்சருக்கு இந்த இம்மினோ தெரபி சிகிச்சை வந்துவிட்டது.