காசநோய் வர காரணமும், அதற்கான சிகிச்சையும்!
காசநோய் என்பது மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும்.
உடலில் நகம் மற்றும் முடி தவிர அனைத்து உறுப்புகளையும் காசநோய் தாக்கக் கூடியது.
காசநோய் நுரையீரலை தான் அதிகம் தாக்கும். இது ஒரு வகையான நிமோனியா.
நாள்பட்ட இருமல், நாள்பட்ட காய்ச்சல், சளியில் ரத்தம், பசியின்மை, உடல் எடை குறைதல் காசநோயின் அறிகுறிகள்.
நெஞ்சு எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன் மூலம் காசநோயின் தாக்கத்தை கண்டறியலாம்.
காசநோய் இருப்பதை உறுதி செய்துவிட்டால் அருகில் உள்ள நுரையீரல் நிபுணரை அணுகி அவரின் ஆலோசனை படி மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆரம்பத்தில் காசநோய் இருப்பதை கண்டறிந்து விட்டால் தினசரி மாத்திரை மற்றும் புரத சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொண்டாலே காசநோயை குணப்படுத்திவிடலாம்.
அரசு மருத்துவமனைகளில் இதற்கு இலவச மற்றும் சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன
பிறந்த குழந்தைகளுக்குப் போடப்படும் பி.சி.ஜி (BCG) தடுப்பூசி காசநோயைத் தடுக்க உதவுகிறது.
பாதிப்பு உள்ளவர்கள் இருமும்போதும் தும்மும்போதும் வாயை கைக்குட்டையால் மூடிக்கொள்ள வேண்டும்.