டேஸ்டியான தேங்காய் பால் ஷேக்
தேவையானப் பொருட்கள்: தேங்காய் - 1 கப், ஏலக்காய் - 2, சர்க்கரை - 4 தேக்கரண்டி, தேங்காய் தண்ணீர் - 1 கப்.
முந்திரிப் பருப்பு, பாதாம், பிஸ்தா மற்றும் உலர் திராட்சை - தலா 10 (ஊற வைத்தது).
மிக்ஸி ஜாரில் தேங்காய், ஏலக்காய் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து பாலை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
மீண்டும் அரைத்த தேங்காயை 1 கப் தண்ணீர் சேர்த்து அரைத்து பால் எடுக்கவும்.
அதேப்போல், ஊற வைத்த பாதாம், பிஸ்தா, முந்திரி, உலர் திராட்சையை, தேங்காய் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
இதனுடன், தேங்காய் பாலுடன் சர்க்கரை சேர்த்து அரைத்து, ஒரு பவுலில் ஊற்றி பிரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்தால், சுவையான தேங்காய் பால் ஷேக் ரெடி.
அதில், நறுக்கிய உலர் பருப்புகளை தூவி அருந்தினால், சுவை அள்ளும்.
தேங்காய் பால் வயிற்றுப் புண்ணைக் குணமாக்குவதுடன், உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.
உலர் பருப்புகள் சேர்க்கப்பட்டுள்ளதால், உடலுக்கு தேவையான சக்தி மற்றும் ஆற்றல் கிடைக்கும்.