வெள்ளரிக்காய் சாறு குடித்தால் இத்தனை பயன்களா...
காய்களில் குறைவான கலோரி அளவுள்ளது, வெள்ளரிக்காய் மட்டும்தான். 100 கிராம் வெள்ளரியில், 18 கலோரி மட்டுமே உள்ளது.
பித்தம், சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்து கோளாறுகளையும் குணமாக்குவதில் இக்காய் சிறந்தது.
வெள்ளரியைச் சமைத்துச்சாப்பிடும் போது பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய உப்புகள் அழிந்து விடுகின்றன.
வயிற்று புண் உள்ளவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தடவை ஆறு அவுன்ஸ் வீதம் வெள்ளரிச்சாறு அருந்தினால் குணம் பெறலாம்.
நீரிழிவு நோயாளிகள் எடை குறைய விதையுடன் சேர்த்தே வெள்ளரிக்காய் சாற்றை அருந்த வேண்டும்.
வறண்ட தோல் உள்ளவர்கள், தினமும் வெள்ளரிக்காய்ச் சாறு குடித்தால் வறட்சித் தன்மையைப் போக்கலாம்.
மலச்சிக்கல் உள்ளவர்கள் தினசரி இரண்டு வெள்ளரிக்காயில் சாறு எடுத்து பருகினால் பிரச்னை தீர்ந்து எப்போதும் குடல் சுத்தமாய் இருக்கும்.
முகத்தில் உள்ள கரும் புள்ளிகள், பருக்கள் முதலியவை குணமாக வெள்ளரிகாயை அரைத்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.