சுவையான உணவு கிடைக்குமிடம்... உலகின் டாப் 100 பட்டியலில் 6 இந்திய நகரங்கள்!

டேஸ்ட் அட்லஸ் என்ற இணையதளம் உலகம் முழுக்க சிறந்த உணவு வகைகள், சிறந்த உணவு நகரங்கள், சிறந்த உணவு பொருட்கள் போன்ற பல பிரிவுகளில் ஆய்வு செய்து பட்டியலை வெளியிட்டுள்ளது.

உலகின் முன்னணி நகரங்கள் இடம் பெற்றுள்ள இந்த பட்டியலில், 6 இந்திய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

5வது இடம் பிடித்த மும்பை 4.81 மதிப்பீட்டை பெற்றுள்ளது. இங்கு வடை பாவ், பாவ் பாஜி மற்றும் பாம்பே பிரியாணி பிரபலம்.

அமிர்தசரஸ் 4.49 மதிப்பீட்டை பெற்று 43வது இடத்தை பிடித்துள்ளது. இங்கு அமிர்தசரி குல்சா பிரபலம்.

புதுடில்லி 4.48 மதிப்பீட்டை பெற்று, 45வது இடத்தை பிடித்துள்ளது. இங்கு சோலே பதுரே, நிஹாரி, பட்டர் சிக்கன் பிரபலம்.

ஹைதராபாத் 50வது இடத்தை பிடித்துள்ளது; இங்கு பிரியாணி பிரபலம்.

கோல்கட்டா 71வது இடத்தை பிடித்துள்ளது; இங்கு ரசகுல்லா மிகவும் பிரபலமானது.

சென்னை 4.40 மதிப்பீட்டை பெற்று, 75வது இடத்தை பிடித்துள்ளது. இங்கு தோசை மற்றும் இட்லி மிகவும் பிரபலம்.

அதேபோல், உலகின் டாப் '100' சிறந்த உணவு நகரங்கள் பட்டியலில் மும்பை (5வது இடம்), அமிர்தசரஸ் மற்றும் சென்னை உட்பட 8 இந்திய நகரங்கள் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.