ஹார்மோன் மாற்றங்களால் டீன் ஏஜ்ஜில் ஏற்படும் பல் கோளாறுகள்!

பெண்களின் வாழ்க்கை முழுதும் ஈஸ்ட்ரோஜன், புரொஜெஸ்டிரோன் ஆகிய பாலியல் ஹார்மோன்களின் சுரப்பு இருக்கும்.

மேலும் மாதவிடாய் துவக்கம், கர்ப்ப காலம், மாதவிடாய் நிறைவு வரை, அந்தந்த வயதிற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும்.

இந்த ஹார்மோன் மாற்றங்கள், பல், ஈறு ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும் என்பதை மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

டீன் ஏஜ் பருவத்தில் ஹார்மோன்களின் அளவு அதிகரிப்பதால், 'பியூபெர்ட்டி ஜின்ஜிவிடிஸ்' எனப்படும் 11 - 14 வயதில் வரும் பருவ ஈறு அழற்சி வரலாம்.

இதனால், ஈறு சிவப்பாகுதல், வீக்கம், எளிதில் ரத்தம் வருதல் போன்ற மாற்றங்கள் ஏற்படலாம்.

பற்கள், பல் இடுக்குகளில் தேங்கும் உணவுத் துகள்கள் மீது, ஹார்மோன்கள் அதிகப்படியாக செயலாற்றுவதால், பிளாக் எனப்படும் நிரந்தர படிமம் உருவாகி, ஈறு அழற்சி ஏற்படுகிறது.

ஹார்மோன் மாற்றங்கள் இயற்கையானது. அந்த சமயத்தில் ஏற்படும் பல் பிரச்னைகளை அலட்சியப் படுத்தாமல், மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது கட்டாயம்.