செரிமான கோளாறுகள் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறி

சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டால், சிறுநீரக மாற்று தான் ஒரே வழி. அது வரையிலும் சிறுநீரகங்களின் வேலையை இயந்திரம் செய்யும்.

துவக்க நிலையில் அறிகுறிகள் தெரியாது. பல்வேறு காரணங்களால் சிறுநீரில் புரதம் வெளியேறினால், கைகள் வீங்கும்.

யூரியா, கிரியாட்டினின் போன்ற நச்சு பொருட்கள் சிறுநீரில் வெளியேறாமல், உடலில் தங்கினால், உள் உறுப்புகளை, குறிப்பாக குடலை பாதிக்கும்.

குமட்டல், வாந்தி தொடர்ந்து இருக்கும். செரிமானக் கோளாறு என்று நினைத்து, அதற்கான மருந்துகளை சாப்பிடுவோம்.

தீவிரமான அறிகுறி இருந்தால், மூச்சு வாங்க ஆரம்பிக்கும். சிறுநீர் வழக்கமான அளவைவிட குறைவாகப் போகும்.

கால் வீங்கும். உடனடியாக டயாலிசிஸ் செய்தால் பிரச்சனை கட்டுக்குள் வரும். தாமதித்தால் இதயம், மூளை பாதிக்கலாம்.

கிரியாட்டின் அளவு சிலருக்கு இயல்பான அளவான 0.7 - 1.3 மி.கி/டெ.லி., இருக்கும். ஆனால், அறிகுறிகள் செயலிழப்பை காட்டும்.

அறிகுறிகளின் அடிப்படையில் டயாலிசிஸ் செய்ய வேண்டியது அவசியம். தொடர்ந்து செரிமானப் பிரச்னைகளுக்கான அறிகுறிகள் இருந்தால், சிறுநீரக செயல்பாட்டை பரிசோதிப்பது அவசியம்.