இறந்தவர்களின் பான் மற்றும் ஆதார் அட்டைகளை சரண்டர் செய்ய வேண்டுமா?

இறந்தவரின் பான் அட்டையை உடனடியாக சரண்டர் செய்ய வேண்டுமென, சட்டரீதியாக கட்டாயமில்லை.

ஆனால், அதை தவறாக பயன்படுத்துவதை தவிர்ப்பதற்காக, வருமான வரித்துறையிடம் ஒப்படைப்பது நல்லது.

இறந்தவருடைய பெயரில் இருக்கும் வங்கி கணக்குகள், மியூச்சுவல் பண்டுகள், சொத்துகள் போன்றவற்றை சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு மாற்ற வேண்டும்.

தொடர்ந்து, அவருக்கான இறுதி வருமான வரி கணக்கை வாரிசுகள் தாக்கல் செய்த பிறகு, பான் கார்டை ஒப்படைப்பது நல்லது.

ஆதார் அட்டையை ரத்து செய்யவோ, நீக்கவோ, அதிகாரிகளிடம் சரண்டர் செய்யவோ 'இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்தில்' அதிகாரப்பூர்வமாக, எந்த வழிமுறையும் சொல்லவில்லை.

எனவே, அதை சரண்டர் செய்ய தேவையில்லை.