ஹெட்போன் பயன்பாட்டால் காது கேட்கும் திறன் குறையுமா? முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?

ஐ.டி., நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மட்டுமல்ல, இன்றைய இளைஞர்கள் அதிக நேரம் காதில் ஹெட்போனை பயன்படுத்துகின்றனர்.

பயணங்களின் போது தொடர்ந்து பல மணி நேரம் ஹெட் போன் பயன்படுத்துவது சகஜமாகிவிட்டது.

இதைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் காது கேட்கும் திறன் குறைய நிறைய வாய்ப்புள்ளது.

இதனைத் தவிர்க்க ஒலி அளவை குறைத்து வைத்து கேட்க வேண்டும். அதிக ஒலி காது ஜவ்வை பாதிக்கும்.

தொடர்ச்சியாக ஹெட் போனை பயன்படுத்தாமல், ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை இடைவெளி விட்டு பயன்படுத்த வேண்டும்.

நல்ல ஏர்பட்ஸ் உள்ள தரமான ஹெட்போனை பயன்படுத்த வேண்டும்.

முடிந்தளவு ஹெட்போன் பயன்பாட்டை குறைத்துக் கொள்வது நல்லது.

காதில் பிரச்னை என்றால், சுய வைத்தியம் பார்க்காமல் அதற்கான மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும்.