உங்கள் கூந்தலில் இந்த தவறுகளை செய்யாதீர்கள்...!
தினமும் ஷாம்பு தேய்த்துக் குளிக்க ஆரம்பித்தால் கூந்தலின் வேர்கள் வலுவிழந்துவிடும். அதன் பிறகு தினமும் கணிசமான அளவு உதிர ஆரம்பிக்கும்.
காரணம் ஷாம்புவில் பலவிதமான வேதிப்பொருட்கள் உள்ளன. எனவே ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று தடவை ஷாம்பு போட்டு குளித்தால் போதுமானது.
நீங்கள் அடிக்கடி தொப்பி அணியும் பழக்கம் உள்ளவரா? இது உங்கள் கூந்தலுக்கு கெடுதல் விளைவிக்கும்.
இயற்கையாக கிடைக்க வேண்டிய ஆக்சிஜன் உங்கள் கூந்தலுக்கு கிடைப்பதை நீங்களே தடை செய்து, விரைவில் வழுக்கையாகி அதன் பின் தொடர்ந்து தொப்பியை வேறு வழியின்றி அணியும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.
தலைக்கு குளித்துவிட்டு அந்த ஈரத்துடன் சீப்பை போட்டு வறட் வறட்டென்று கூந்தலை வாரினால் முடி உடைந்துடன், வேரோடு வெளியே வந்துவிடும்.
அடிக்கடி இப்படி செய்தால் வராத வழுக்கையும் வந்து சேரும். கூந்தல் நன்றாக உலர்ந்த பின்னத்தான் சீப்பை பயன்படுத்தி தலைவார வேண்டும்.