தாகத்தை தணிக்க சீரகத்தண்ணீருக்கு பதிலாக ஓமத்தண்ணீர் குடிக்கலாமா?

தாகத்தை தணிக்க ஒருசிலர் சீரகத்தண்ணீர் அல்லது ஓமத் தண்ணீர் அருந்துவர்.

இதில், சீரகம் தாகத்தை தணித்து உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுத்தும்.

ஓமம் செரிமானத்தை அதிகப்படுத்தி உடலுக்கு வெப்பத்தை தரும்.

பசி அதிகமாக இருந்து அதனால் சாப்பிட முடியாமல் இருந்தால் சீரகத்தண்ணீர் அருந்தலாம்.

வயிற்றில் மந்தம் ஏற்பட்டு செரிக்காமல் சாப்பிட முடியாமல் இருந்தால் ஓமத் தண்ணீர் அருந்தலாம்.

வயிற்றுப் பிரச்னை என்றால் பெரியவர்களுக்கு சீரகத்தண்ணீரும், குழந்தைகளுக்கு ஓமத் தண்ணீரும் கொடுக்கலாம்.