அரிசி உண்பது குறித்த சில புரிதல்கள்...

அரிசி என்பது உடல் நலத்திற்கு கேடானது அல்ல. ஆனால், மூன்று நேரமும் சமநிலை இன்றி அரிசி உணவு எடுத்துக்கொள்ளக்கூடாது என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

அரிசியுடன் காய்கறி, பருப்பு, தயிர், முட்டை, மீன், பயறு போன்ற புரத உணவு சேர்த்துக்கொள்வது அவசியம். சாதத்தின் அளவு குறைவாக, அளவாக எடுத்துக்கொள்ளலாம்.

அரிசியை குறைத்து மைதா, பேக்கரி பொருட்கள் அதாவது ரிபைன் செய்யப்பட்ட உணவு அதிகம் எடுத்துக்கொண்டால் உடல் சோர்வு காணப்படும்.

மேலும் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் போன்ற சத்துக்கள் உடலில் இல்லை என்றாலும் சோர்வு காணப்படும்.

இது தவிர, உணவு நேரம் ஒழுங்கில்லாமல் இருப்பது, தண்ணீர் குறைவாக குடிப்பது, துாக்கம் இன்மையும் சோர்வுக்கு மிக முக்கிய காரணம்.

சிறுதானியங்கள் மிகவும் சத்தான உணவு. வயது, ஜீரணத்திறன் உடல்நிலை, சமைக்கும் முறை பொறுத்தே சிறுதானியங்களை தேர்வு செய்யவேண்டும்.

அரிசியை முழுவதும் மாற்றாமல், வாரம் இருமுறை, மூன்று முறை என சேர்த்துக்கொள்ளலாம். பல்வகை உணவுகளே நல்ல உடல்நலத்திற்கு தேவை.