அலட்சியமான ராக் கிடார் இசை எதிர்பாரா தவறால் உண்டானது தெரியுமா?
நவீன இசைப் பிரியர்கள் அனைவரையும் கவரும் இசைக்கருவி என்றால் அது எலெக்ட்ரிக் கிடார்தான்.
இதற்காக பல்வேறு எஃபெக்ட் பெடல்கள் கண்டிபிடிக்கப்பட்டு வருகின்றன. எலெக்ட்ரிக் கிடாரில் பயன்படுத்தப்படும் 'டிஸ்டார்ஷன்' எனப்படும் ஒலி குறித்த தகவல்
1940களில் அமெரிக்க பாப், பிளூஸ், ராப் இசை நிகழ்ச்சிகளில் இசைக் கலைஞர்களால் தவறுதலாகப் பயன்படுத்தப்பட்ட டிஸ்டார்ஷன் அடுத்த 50 ஆண்டுகளில் இசைத்துறையைப் புரட்டிப் போட்டது.
எலெக்ட்ரிக் கெய்ன் (gain) அதிகரிப்பதன் மூலமாக ஒலியை சில விநாடிகள் நீட்டிக்க முடியும் என கண்டறியப்பட்டது. பின்னர் பல்வேறு எஃபெக்ட் பெடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
'வாவ்' என சப்தம் எழுப்பும் வாவ் பெடல் உட்பட இன்று பல பெடல்கள் உருவாகி விட்டன. இதனை கிடாருடன் இணைக்கும்போது அதிக வாட்ஸ் கொண்ட ஆம்ப்ளிஃபையர் அதிநவீன சப்தத்தை உண்டாக்கும்.
தற்போது எலெக்ட்ரிக் வயலின்களுடனும் இந்த பெடல்கள் இணைக்கப்படுகின்றன. இது எலெக்ட்ரிக் கிடார் போலவே ஒலியை உண்டாக்க வல்லது.
இசைத்துறையுடன் ஆடியோ தொழில்நுட்பம் இணைந்து தற்போது இசைக்கு ஓர் புதிய பரிணாமத்தை கொடுத்துக்கொண்டு இருக்கும் இந்த காலத்தில், எலெக்ட்ரிக் கிடார் நவீன இசையின் மகுடம் சூடிய மன்னனாக வலம் வருகிறதென்றால் அது மிகையில்லை.