இன்று உலக பீட்சா தினம்

ஒவ்வொரு ஆண்டும் பிப்., 9ல் உலகெங்கிலும் பீட்சா தினம் கொண்டாடப்படுகிறது.

இத்தாலிய பாரம்பரிய உணவான பீட்சாவின் சுவையைக் கொண்டாடும் வகையிலும், அதன் கலாச்சார முக்கியத்துவத்தைப் பாராட்டும் வகையிலும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இத்தாலி நாட்டின் நேபிள்ஸில், 8ம் நுாற்றாண்டில், முதன் முதலாக, பீட்சா தயாரிக்கப்பட்டது.

ஏழை தொழிலாளர்களின் பசியாற்ற வந்த எளிய உணவாக முதன் முதலில் அறிமுகமானது.

கடந்த, 1800க்கு பிறகு, பிரபலமாக மாறத் துவங்கியது. இத்தாலிய ராணி மார்கெரிட்டா அந்த சுவை பிடித்துப் போகவே, அந்நாடு முழுவதும், பீட்சா, பிரபலமான உணவானது.

இத்தாலியர்கள், அமெரிக்காவிற்கு செல்லத் துவங்கியதும், பீட்சா மற்ற நாட்டவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

அவர்கள் வேலை செய்யும் உணவகங்கள் மற்றும் கடைகளில் விற்கப்பட்டது. அப்படியே உலகம் முழுவதும் பிரபலமானது.