மழைக்காலத்தில் என்னென்ன சாப்பிடலாம்!

மழைக்காலத்தில் நாம் சாப்பிடும் உணவில், இனிப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளாமலிருப்பது நல்லது

பால் மற்றும் பால் சார்ந்த தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றையும் அதிகம் சாப்பிடக்கூடாது. ஆனால், மோர் சாப்பிடலாம். உடலுக்கு நல்லது

நம் உணவில் காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை மழைக்காலத்தில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்

மதிய உணவின் போது, துாதுவளை ரசம் வைத்து சாப்பிடலாம்

இரவு துாங்குவதற்கு முன், பாலில் மஞ்சள் துாள், மிளகு துாள், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது நல்லது

நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய், பூசணி, புடலை, பீர்க்கன், வெள்ளரி போன்ற காய்கறிகளை இந்த சீசனில் உணவில் சேர்ப்பதை தவிர்க்கவும்

கண்டிப்பாக மழைக்காலத்தில் நம் உணவு பதார்த்தங்களில் மிளகுப் பொடியைச் சேர்த்து சமைத்து சாப்பிடலாம்

 இரவு உணவில் பச்சைப் பயறு, கேழ்வரகு, கீரை ஆகியவற்றை சேர்க்கக் கூடாது

மழை நேர காய்ச்சலுக்கு, நிலவேம்பு கஷாயம் கொடுப்பது சிறந்தது. நம் வீட்டிலேயே நிலவேம்பு பொடியை வாங்கி வைத்துக் கொள்ளலாம்.