ஊட்டச்சத்து நிறைந்த பச்சை பயறு சப்பாத்தி

தேவையான பொருட்கள்: பச்சை பயறு - 2 கப், மிளகாய் - 2, சீரகம் - 2 டீஸ்பூன், கோதுமை மாவு - 2கப், உப்பு - சுவைக்கு ஏற்ப, தண்ணீர் - போதுமான அளவு

செய்முறை ; முதலில் பச்சை பயறில் தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் நன்றாக ஊற வைத்து கொள்ளவும்.

ஊற வைத்த பச்சை பயறு, இரண்டு மிளகாய், 2 டீஸ்பூன் சீரகம் போன்றவற்றை மிக்சியில் தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளவும். நைஸாக அரைத்த பின், ஒரு கிண்ணத்தில் மாற்றி கொள்ளவும்.

பின் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்து கொள்ளவும். அரைத்து வைத்துள்ள பச்சை பயறு கலவையை ஊற்றி, நன்றாக பிசைந்து கொள்ளவும்.

தேவையான அளவு உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

சிறிய சிறிய உருண்டையாக்கி சப்பாத்தி கட்டையில் தேய்த்து எடுக்கவும்.

இறுதியாக தோசை கல்லை சூடேற்றி, தேய்த்து வைத்த மாவை சுட்டெடுத்தால் போதும். சுவையான, ஆரோக்கியம் நிறைந்த பச்சை பயறு சப்பாத்தி ரெடி.