கரு தரிக்க குடல் நலமும் முக்கியம்!
கரு தரிப்பதற்கான வாய்ப்புகளை தீர்மானிப்பதில் ஒரு தம்பதிக்கு, குறிப்பாக பெண்ணுக்கு குடல் முக்கிய பங்கு வகிக்கிறது.
காரணம், குடல் மற்றும் கருப்பையின் செயல்பாடு ஒன்றோடொன்று இணைந்தது. ஆரோக்கியமான உடல் செயல்பாடுகளுக்கு, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அவசியம்.
அதேசமயம், அதிகப்படியாக ஈஸ்ட்ரோஜன் சுரந்தால், பைப்ராய்டுகள், பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் '-பிசிஓஎஸ்' போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.
ஆரோக்கியமான குடல் மட்டுமே, ஈஸ்ட்ரோஜன் அதிகம் சுரப்பதை கட்டுப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியில், 70 சதவீத எதிர்ப்பு சக்தியானது குடலில் தான் உள்ளது.
ஆரோக்கியமான குடல், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதுடன், கருச்சிதைவுகளை தடுக்க உதவும்.
தரமான கரு முட்டைகள், விந்தணுக்களை உடல் உற்பத்தி செய்ய, ஊட்டச்சத்துகளை உடல் முறையாக உறிஞ்ச வேண்டும்.
குடல் ஆரோக்கியம் சீராக இருந்தால் மட்டுமே, நாம் உட்கொள்ளும் உணவு, செரிமானமாகி ஊட்டச்சத்துகளை குடல் உறிஞ்சி, கழிவுகளை வெளியேற்ற முடியும்.
ஆரோக்கியமான குடலானது செரோடோனின் உற்பத்தியை மேம்படுத்துவதுடன், மன அழுத்தத்தை குறைப்பதிலும் முக்கிய பங்குவகிக்கிறது.