ரசனையை கூட்டும் ரயில் பயணங்கள்..!
நீண்ட நேர கார் மற்றும் பேருந்து பயணம் என்பது சிறிது சலிப்பை தர வாய்ப்புள்ளது. போர்டிங் பாஸ் பெற நீண்ட நேரம் காத்திருப்பதால் விமான பயணம் கூட சிறிது எரிச்சலை ஏற்படுத்தலாம்.
ஆனால் ரயிலில் நெடுந்தூர பயணம் என்றால், நம்மில் பலருக்கும் குஷியாகிவிடும். ஏனென்றால் ரயில் பயணங்கள் என்பதை நம்மால் அவ்வளவு எளிதாக மறந்து விடமுடியாது.
இயற்கையின் எழிலோடு இணைந்து செல்லும் ரயில் பயணங்களும், அப்போது கிடைக்கும் அனுபவமும் பெரும் அலாதியானது.
இந்தியாவில் உள்ள சிறப்பான இயற்கை காட்சிகளை கொண்ட சில ரயில் வழித்தடங்கள் மற்றும் பயண அனுபவங்கள் குறித்து பார்க்கலாம்.
110 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் உதகை மலை ரயில் என்பது, தென் இந்தியாவுக்கு சுற்றுலா வரும் ஒவ்வொரு பயணியின் முக்கிய விருப்பமாக இருக்கிறது.
பெங்களூரு - கோவா இடையேயான பயணத்தில் ரயிலின் இரு பக்க ஜன்னல் வழியே உங்களை வேறொரு அற்புதமான உலகிற்கு அழைத்துச் சென்று விடும்.
மட்காவ் - மும்பை நோக்கிச் செல்லும் போது மலைகளின் அழகு ஒருபுறம் என்றால், மறுபுறம் அரபிக் கடலின் பிரமாண்ட அழகு உங்களை சொக்க வைக்கும்.
ஜல்பைகுரி - டார்ஜிலிங் நகரங்களுக்கு இடையே 2 அடி அகலம் மட்டுமே கொண்ட ரயில்பாதை, பயண விரும்பிகளை கவர்ந்திழுக்க கூடிய இந்த பயணம், நினைவுகளில் நீங்காத ஒன்றாகும்.
கால்காவில் இருந்து சிம்லாவுக்குச் செல்லும் இந்த ரயில் பயணத்தில்,
மரக்காடுகள், வண்ணமயமான புல்வெளிகள், பாய்ந்தோடும் ஆறுகள் வழியே செல்வது
ரசனை மிகுந்த பயணமாக அமையும்.