பாகற்காய்  கசக்கும்.. ஆரோக்கியம் இனிக்கும்! 
        
 பொதுவாக பாகற்காய் உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும். இதில் இரண்டு வகைகள் உண்டு. 
        
பொடியாக இருக்கும் பாகற்காயை மிதி பாகற்காய் என்றும், நன்கு பெரிதாக நீளமாக இருப்பதை, கொம்பு பாகற்காய் என்றும் அழைக்கின்றனர்.  
        
நீரிழிவு உள்ளவர்களுக்கு பாகற்காய் சிறந்த மருந்து. இதில் உள்ள லெக்டின், இன்சுலினை போல் செயல்பட்டு, உடல் திசுக்களில் குளூக்கோஸ் ஆக பயன்படுத்துவதை அதிகபடுத்தும். 
        
சீரான முறையில் பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், செரிமான அமிலம் சுரப்பது மேம்படும். எனவே பசியும் அதிகரிக்கும்.  
        
பாகற்காய், உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும். பித்தத்தைத் தணிக்கும். 
        
 இதில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ உள்ளதால், கண் சம்மந்தமான நோய்களுக்கு தீர்வாக உள்ளது.  
        
ஜூரம், இருமல், இரைப்பு, மூலம் இருப்பவர்களும், பாகற்காயை அடிக்கடி உண்ணலாம்.  
        
இதன் இலைகளை அரைத்து, பத்துப்போட்டால் சிரங்கு மறைந்து விடும்.