இஞ்சியை இதனுடன் சேர்த்து சாப்பிட்டால் இத்தனை பலன்களா..

இஞ்சியில் பல்வேறு மருத்துவ நன்மைகள் இருந்தாலும், அதை எதனுடன் சேர்த்து சாப்பிட்டால் என்னென்ன பலன்களைப் பெறலாம் என்பதைப் பற்றி காண்போம்...

தினமும் இஞ்சியின் சாற்றை, பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாவதுடன், விரைவாக உடலின் எடையைக் குறைக்கலாம்

இஞ்சியை புதினா இலையோடு சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வர, பித்தம், அஜீரணம், வாய் துர்நாற்றம் மற்றும் வயிற்று உப்புசம் போன்றவை குணமாகும்

வாரம் ஒரு முறை, இஞ்சியை சுட்டு சாப்பிட, பித்தம் மற்றும் கபம் நோய்கள் விரைவாக குணமாகும்.

அதேபோல், இஞ்சி சாற்றில் வெல்லம் கலந்து சாப்பிட்டு வந்தால், வாதக் கோளாறுகள் நீங்கி, உடலில் பலம் உண்டாகும்

காலையில் இஞ்சி சாற்றில், சிறிதளவு உப்பு கலந்து, மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல், மலச்சிக்கல் விரைவில் குணமாகும்

இஞ்சி, பூண்டு ஆகிய இரண்டையும் அரைத்து, ஒரு கப் வெந்நீரில் கலந்து காலை, மாலை என, இருவேளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மார்பு வலி குணமாகும்.

இஞ்சி சாற்றோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு, வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும். நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

இஞ்சி சாற்றில், எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிட்டு வந்தால், நல்ல பசி உணர்வை ஏற்படுத்தும். அதேபோல் இஞ்சி, மிளகு ஆகிய இரண்டையும் அரைத்து சாப்பிட்டு வந்தால், அஜீரணம் ஏற்படாது