ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பாசிப்பயறு சப்பாத்தி

தேவையானப் பொருட்கள்: முளை கட்டிய பாசிப்பயறு - 2 கப், இஞ்சி -1 சிறிய துண்டு, உருளைக்கிழங்கு -1, வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 5.

கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி, உப்பு - தேவையான அளவு, சீரகம் - 1 ஸ்பூன்.

முளைக்கட்டிய பாசிப் பயறுடன், இஞ்சி, சிறிதளவு நீர் சேர்த்து, கெட்டியாக மிக்ஸி ஜாரில் அரைக்கவும்.

அதனுடன், வேகவைத்து உறித்த உருளைக்கிழங்கு, சீரகம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் நன்றாக பிசைந்து கொள்ளவும்.

அடுப்பில் தோசைக்கல் வைத்து நெய் ஊற்றி சூடானதும், ஏற்கனவே பிசைந்து வைத்துள்ள மாவை சப்பாத்தியாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு சிறிது நெய் ஊற்றவும்.

இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேக வைத்தால், சுவையான பாசிப்பயறு சப்பாத்தி ரெடி.

தக்காளி சட்னி, தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவை அள்ளும். முளை கட்டிய பாசிப்பயறு உடலுக்கு குளுமையானது. ஆரோக்கியத்துக்கு நல்லது.