ஆரோக்கியம் தரும் வள்ளிக்கிழங்கு ஜாமூன்
தேவையானப் பொருட்கள்: சர்க்கரை வள்ளிக்கிழங்கு - அரை கிலோ, துருவிய வெல்லம் - 1 கப், ஏலக்காய் துாள் - 2 டீஸ்பூன்.
கோதுமை மாவு - 3 டீஸ்பூன், பால் பவுடர் - 1 டீஸ்பூன், உப்பு மற்றும் பேக்கிங் சோடா - தலா 1 சிட்டிகை, எண்ணெய் - தேவைக்கேற்ப.
சர்க்கரை வள்ளிக்கிழங்கை சுத்தமாக கழுவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வேக வைத்து, சூடு ஆறியவுடன் தோலை உறித்து துருவிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் துருவிய வள்ளிக்கிழங்கு, கோதுமை மாவு, பால் பவுடரை போட்டு பிசையவும்.
இந்த கலவையில் பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து, தேவையானளவு தண்ணீர் ஊற்றி, துறுவிய வெல்லம், ஏலக்காய் தூளை சேர்த்து பாகு காய்ச்சவும்.
பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் ஜாமூன் உருண்டைகளை போட்டு, பொன்னிறமாக பொறித்தெடுத்து, வெல்லப்பாகில் போடவும்.
இரண்டு மணி நேரம் பாகில் ஊற வைத்தால், சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஜாமூன் இப்போது ரெடி.
கிழங்கை விரும்பாத குட்டீஸ்கள் கூட ஆர்வமுடன் இந்த ஜாமூனை சாப்பிடுவர்.