நுழைவுத் தேர்வில் சாதிக்க இதோ சில டிரிக்ஸ் !
வீட்டில் படுக்கையறை, டிவி உள்ள இடத்தை தவிர்த்து படிப்பதற்கென, காற்றோட்டமான தனி இடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
திட்டம் இல்லாத உழைப்பு வீணாகிவிடும் என்பதால், எந்தெந்த நேரங்களில் எந்தெந்த பாடங்களைப் படிக்க வேண்டும் என ஒரு அட்டவணையை உருவாக்குங்கள்.
சமூக வலைதள நோட்டிபிகேசன் உங்கள் கவனத்தை எளிதில் சிதைக்கும் என்பதால், படிக்கும் நேரத்தில் அலைபேசியை வேறு அறையில் வைத்து விடுங்கள்.
தொடர்ச்சியாக மணிக்கணக்கில் படிப்பது மூளையைச் சோர்வடையச் செய்யும் என்பதால், 25 முதல் 50 நிமிடங்கள் படித்துவிட்டு, 5 முதல் 10 நிமிடங்கள் சிறிய பிரேக் எடுத்து ரிலாக்ஸ் செய்யவும்.
ஒரு நாளைக்கு 7 - 8 மணி நேர ஆழ்ந்த உறக்கம் அவசியம். அப்போது தான் படித்த விஷயங்கள் நினைவில் நிற்கும்.
அதே போல், அதிக எண்ணெய் உள்ள உணவுகளைத் தவிர்த்து, பழங்கள் மற்றும் காய்கறிகள் எடுத்துக்கொள்வது உடலைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
நண்பர்கள் வெளியில் கூப்பிடும்போதோ அல்லது உறவினர்கள் வீட்டிற்கு வரும் போதோ தயங்காமல் உங்கள் இலக்கை அவர்களுக்குத் புரிய வைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்துங்கள்.
முந்தைய ஆண்டு வினாத்தாள்களையும் சேர்த்து படிப்பது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். நீங்கள் எங்கே தவறு செய்கிறீர்கள் என தெரிந்துகொண்டு அதைச் சரிசெய்ய இது உதவும்.