குருமிளகின் ஆரோக்கிய நன்மைகள் இவை

கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், தையமின், ரிபோபிளேவின் மற்றும் நியாசின் உள்ளிட்ட தாதுப்பொருட்களும், உயிர்ச்சத்துக்களும் குருமிளகில் உள்ளன.

நெஞ்சுச்சளி, நுரையீரல், செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனை இது அதிகரிக்கிறது. சுவாசக் குழாயில் இருக்கும் அடைப்பை நீக்கி, சைனஸ், மூக்கடைப்பு பிரச்னைகளுக்கு தீர்வாகிறது.

புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. இதிலுள்ள செலினியம், குர்குமின், பீட்டா கரோட்டின், வைட்டமின் 'பி' போன்றவை, குடல் பகுதிகளிலுள்ள அசுத்தங்களை நீக்குகிறது.

இதிலுள்ள, 'பெப்பரைன்' மூளையின் அறிவாற்றல் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. ரத்தக் கொதிப்பை சீரான அளவில் வைக்க உதவுகிறது.

இதன் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தினமும் மிளகு ரசம் சாப்பிட, வயிற்று உபாதைகள், சுவாச நோய்கள் வராமலிருக்கும்.

மிளகை கடித்துச் சாப்பிட்டால் பல் ஈறுகளுக்கு பலம் கிடைக்கும். இதனுடன் உப்புச் சேர்த்து பல் துலக்கி வர, பல் வலி, சொத்தை பல், ஈறு வலி குணமாகும்; வாய் துர்நாற்றத்தை போக்கும்.

சளியால் ஏற்படும் இருமலுக்கு மிளகு நீரில், பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கலாம்.

மிளகு, இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா சேர்த்து அரைத்த விழுதை சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டால், செரிமான கோளாறு நீங்கும்.