குழந்தைகளுக்கான சரிவிகித உணவு இதோ!

குழந்தைகளின் வளர்ச்சி நிலையை பிறந்து ஐந்து ஆண்டுகள், 5-10 வயது, 10-15 வயது என மூன்றாக பிரிக்கலாம்.

இதில், வயது, உயரத்துக்கு ஏற்ப, எடை குறைவாகவோ, அதிகமாகவோ இருந்தால், அது ஆரோக்கியமற்ற வளர்ச்சி நிலை. இதை சீராக்க, சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கான உணவுத்தட்டை 4 பாகமாக பிரித்து கொண்டால், 1 பாகம் அரிசி, சப்பாத்தி, கஞ்சி என ஏதாவது ஒன்றாகவும், 2ம் பாகம் காய்கறி, கீரைகளாக தரலாம்.

3வது பாகம், சுண்டல், பச்சைபயறு, பன்னீர், கொழுப்புச்சத்து குறைவாகவுள்ள சிக்கன், மட்டன், மீன் என ஏதாவது ஒன்றாகவும், 4வது பாகம் பழங்களாகவும் இருக்க வேண்டும்.

அப்போதுதான், ஒருநாளைக்கு உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட், புரோட்டீன், கொழுப்புச்சத்து, விட்டமின், தாதுக்களை உணவிலிருந்து பெற முடியும்.

தினசரி, குறைந்தபட்சம் 1-2 லிட்டர் தண்ணீராவது குடிப்பதை, உறுதி செய்ய வேண்டும்.

குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவு ஜீரணமாக, செரிமானம் சீராக, குடலின் இயக்கத்திற்கு, நார்ச்சத்து அவசியம்.

ஏனெனில் உடலின் 2வது மூளையாக கருதப்படும் செரிமான மண்டலத்தில், கழிவுகள் தேங்காமல் இருந்தால் தான், மற்ற உறுப்புகளின் இயக்கம் சீராக நடக்கும்.

உடலின் ஒட்டுமொத்த இயக்கமும் சீராக, சுறுசுறுப்புடன் இயங்கவும், உடற்பயிற்சி, யோகா என ஏதாவது ஒன்றில், குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டும்.

சூரிய ஒளி நேரடியாக உடலில்படும்போது தான், விட்டமின் டி சத்து கிடைக்கும். இது கால்சியம் சத்தை உணவில் இருந்து உறிஞ்சுவதில் முக்கிய பங்காற்றுகிறது.

எனவே, உங்களின் இருப்பிடத்தை சுற்றி, பருவக்காலத்திற்கேற்ப கிடைக்கும் காய்கறி, கீரைகள், பழங்கள், உணவுப்பொருட்களை சாப்பிட தர முக்கியத்துவம் செலுத்த வேண்டும்.