டேஸ்டியான முட்டை கேக் ரெசிபி இதோ!
தேவையானப் பொருட்கள்: முட்டை - 3, பால் - 1 லிட்டர், சர்க்கரை - 1 கப், நெய் 2 டீஸ்பூன், ஏலக்காய் துாள் - சிறிதளவு.
ஒரு பவுலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அதை நன்கு அடித்துக் கொள்ளவும்.
பின், வேறு பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சி, கோவா பதத்துக்கு வரும் வரை விடவும்.
அடிபிடிக்காமல் இருக்க அடுப்பை மிதமான தணலில் வைத்து, பாலை அவ்வப்போது கரண்டியால் கிளறி விடவும்.
பால் கோவா பதம் வந்தவுடன், முட்டை கலவை, நெய் சேர்த்து மிதமான தீயில் கட்டி பிடிக்காதவாறு கைவிடாமல் கிளறவும்.
கலவை கெட்டியான மாவு பதத்துக்கு வந்தவுடன், அடுப்பிலிருந்து இறக்கி, சதுர வடிவிலான பெரிய பாத்திரத்தின் உட்பகுதியில் நெய் தடவி, அதில் கலவையை ஊற்றவும்.
இந்த பாத்திரத்தை மைக்ரோ வேவ் அடுப்பில், 18௦ டிகிரி வெப்பம் 'செட்' செய்து, 30 நிமிடங்கள் வைத்த பின், வெளியே எடுக்கவும்.
இப்போது, சுவையான முட்டை கேக் அல்லது முட்டை மிட்டாய் கேக் ரெடி. குழந்தைகள் ஆர்வமுடன் சாப்பிடுவர்.