நவராத்திரி ஸ்பெஷல் : கடலைப்பருப்பு சுசியம்!
நவராத்திரி பூஜையின் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு பிரசாதம் செய்து படைப்பதுண்டு. இன்று என்ன செய்யலாம் என குழப்பம் வேண்டாம். இதோ கடலைப்பருப்பு சுசியம் ரெசிபி...
தேவையான பொருட்கள்: பச்சரிசி - ஒன்றரை ஆழாக்கு, உளுந்து - ஒண்ணேகால் ஆழாக்கு, ஜவ்வரிசி - ஒரு தேக்கரண்டி,
கடலை பருப்பு, வெல்லம் - தலா ஒரு கப், ஏலக்காய் துாள், தேங்காய் துருவல் - தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசி, உளுந்து மற்றும் ஜவ்வரிசியை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
பின் தண்ணீரை வடித்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, வடை மாவு பதத்தில் அரைத்து எடுத்தால், மேல் மாவு தயார்.
கடலைப் பருப்பை மலர வேக வைத்து வடிக்கவும். சம அளவு வெல்லம், சிறிதளவு ஏலக்காய்த்துாள் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். விரும்பினால், தேங்காய்த்துருவல் சிறிதளவு சேர்க்கலாம்.
பின்னர், சிறிய உருண்டைகளாக உருட்டி, மேல் மாவில் தோய்த்து எடுத்து, சூடான எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும். சுசியம் ரெடி!!