கொளுத்தும் வெயிலுக்கு குளிர்ச்சியாக இந்தியாவில் பார்க்க வேண்டிய நீர்வீழ்ச்சிகள் சில...!

அழகிய சாரல், கொட்டும் அருவி என கவர்ந்திழுக்கிறது கேரளாவில் இயற்கை எழிலுடன் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி.

கர்நாடகாவில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சி இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும். பசுமையான பள்ளத்தாக்குகளின் மீது 829 அடி உயரத்திலிருந்து ஆர்பரித்து கொட்டுகிறது தண்ணீர்.

மேகாலயாவின், சிரபுஞ்சியில் பச்சைப்பசேலென அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ள நொகாலிகாய் நீர்வீழ்ச்சியில் 1,100 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் விழுவது மெய்சிலிர்க்க வைக்கிறது.

கோவாவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் கம்பீரமாக உள்ள துத்சாகர் நீர்வீழ்ச்சியில் 1, 017 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் கொட்டுவது கண்கொள்ளா காட்சியாகும்.

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் மீது அமைந்துள்ளது குற்றாலம் நீர்வீழ்ச்சி. தண்ணீரில் உள்ள மூலிகைகளின் மருத்துவத்தன்மை காரணமாக, 'மருத்துவ ஸ்பா' என அழைக்கப்படுகிறது.

இந்தியாவின் நயாகரா என சத்தீஸ்கரில் உள்ள சித்ரகோட் நீர்வீழ்ச்சி அழைக்கப்படுகிறது. 100 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் கொட்டும் அழகு பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக உள்ளது.