ஓவர் திங்கிங்கால் அவதிப்படுபவர்கள் முயற்சிக்க வேண்டியவை இதோ
ஓவர் திங்கிங் எனும் மிகையான சிந்தனை என்பது யாருக்கும் நடக்கக்கூடியது தான். அதைக் கையாள கற்றுக்கொண்டால், எதிர்மறையான, கவலையான சிந்தனைகளிலிருந்து ஒதுங்கி இருக்கலாம்.
அதிகப்படியான சிந்தனையிலிருந்து உங்களை விடுவிக்க எளிய யோசனைகள் இதோ...
விழிப்புணர்வு மாற்றத்தின் துவக்கம்... அதிகமாகச் சிந்திக்கும் பழக்கத்தை எதிர்கொள்ள துவங்கும் முன், அது நிகழும் போது அதைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க கற்றுக்கொள்ளவும்.
தவறாக போகும் என நினைக்காதீர்கள்... நடக்கக்கூடியவை தவறாக சென்றுவிடுமோ என எதிர்மறையாக கவனம் செலுத்தினால், முடக்கிப்போடும் என்பதால் அதை நிறுத்துங்கள்.
மகிழ்ச்சியை நோக்கி திரும்புங்கள்... மகிழ்ச்சியான, நேர்மறை விஷயங்களில் உங்களைத் திசை திருப்பும் வழியை கண்டுபிடியுங்கள். இவை ஓவர் திங்கிங்கில் இருந்து விலக்கி வைக்கும்.
பெர்ஃபெக்ட்டிற்காக காத்திருக்காதீர்கள்... அனைத்திலும் முழுமையை எதிர்பார்ப்பது யதார்த்தத்துக்கு ஒத்துவராது. பெர்ஃபெக்ட்டிற்காக காத்திருக்காமல் முன்னேறி செல்வதே புத்திசாலித்தனம்.
பயம் பற்றிய பார்வையை மாற்றவும்... முன்பு ஒரு விஷயத்தில் தோல்வியை சந்தித்தீர்கள் எனில், அதுவே தொடர்ந்து நடக்காது. ஒவ்வொரு வாய்ப்பையும் புதிய தொடக்கமாக நினைக்கவும்.
எதிர்காலத்தை கணிக்க முயற்சிக்காதீர்... எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது; உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் விஷயங்களில் நேரத்தை செலவிடுங்கள்.