பாதங்களில் ஏற்படும் சிறிய பிளவுகளுக்கு, பித்த வெடிப்பு என்று பெயர். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும், அசுத்தம் காரணமாகவும், இந்த வெடிப்புகள் ஏற்படுகின்றன.
வெடிப்புகள் அதிகமாக உள்ளவர்கள், முழுவதும் மூடிய செருப்புகளையே அணிய வேண்டும். இல்லை என்றால் கட் ஷூகளை அணியலாம். பாத வெடிப்புகள் போக சில டிப்ஸ் இதோ…
பாத சருமத்தை மென்மையாக்க, பாதங்களை வெது வெதுப்பான தண்ணீரில், 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின் ஸ்க்ரப்பர் கொண்டு நன்கு தேய்க்க வேண்டும்.
பின் பாதங்களுக்கான நல்ல மாய்ஸ்சுரைசிங் க்ரீமை தடவி, 20 நிமிடங்கள் வரை அவை பாதங்களில் நன்றாக ஊறும் படி செய்யவும். வெடிப்புகள் மறையும்.
தினமும் குளிக்கும்போது பாதத்துக்குரிய ஸ்க்ரப்பர்களைப் பயன்படுத்தி கால்களை நன்கு தேய்க்க வேண்டும். இறந்த செல்கள் நீங்கி பாதம் மிகவும் மென்மையாக மாறிவிடும்.
மருதாணி இலையுடன் கிழங்கு மஞ்சளை அரைத்து இரவில் பாதங்களில் தடவலாம். ஒரு மணி நேரத்திற்கு பிறகு கழுவ வேண்டும்.
வேப்ப எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால் பித்த வெடிப்பு முழுவதும் குணமாகும்.
தீவிர பிரச்னை உள்ளவர்கள் ஒரு முறை அழகு நிலையம் சென்று பெடிக்யூர் செய்து பாதங்களை அழகாக்கிக் கொள்ளலாம். பின்பு வீட்டில் பராமரிக்க துவங்கலாம்.
உடலில் நீர்ச்சத்துக் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.