கர்ப்பவாய் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பது எப்படி?

இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் புற்று நோய்களில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இது 99 சதவீதம் 'ஹியூமன் பாப்பிலோமா' என்னும் வைரஸ் தொற்றின் மூலம் ஏற்படக் கூடியது.

இந்த புற்றுநோயினை தடுப்பூசி செலுத்தி கொள்வதன் மூலம் தடுக்க முடியும்.

9 முதல் 14 வயது வரை உள்ள சிறுமிகள் தடுப்பூசி போட்டுக் கொள்ள சிறந்த வயது.

15 முதல் 26 வயது வரையுள்ள பெண்களும் போட்டுக் கொள்ளலாம்.

27 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனைப்படி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

இந்திய அரசு மூலம் 14, 15 வயது நிரம்பிய பெண்களுக்கு இலவச தடுப்பூசி வழங்கப்படுகிறது.

அந்தந்த பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.

தேசிய குழந்தைகள் நலத்திட்ட பெண்கள் மருத்துவக்குழு உதவியுடன் தேவையானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.