நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் பல் நலத்தை எவ்வாறு பாதிக்கிறது?

நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஈறு தொற்று அதிகம் ஏற்படக்கூடும்.

பிற உடல் பாகங்களை போன்று வாயில் ஏற்படும் புண் குணமாகவும் தாமதமாகும்.

எனவே, சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியமானது.

நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயல்பாகவே, ரத்த அழுத்த பாதிப்புக்கு உட்கொள்ளும் மருந்துகளால், வாயில் எச்சில் சுரப்பது குறையும்.

இதனால் விரைவில் பல் சொத்தை ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது.

எனவே, அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.

இவர்கள், அடிக்கடி பல் பரிசோதனையும் செய்து கொள்வது நல்லது.