நுரையீரல் ஆரோக்கியமாக உள்ளதா என தெரிந்து கொள்வது எப்படி?
நுரையீரல் ஆரோக்கியத்தை அறிந்து கொள்ள 'ஸ்பைரோமெட்ரி' கருவியின் மூலம் சுவாச திறன் அறியும் சோதனை செய்ய வேண்டும்.
மார்பு எக்ஸ்ரே பரிசோதனையிலும் நுரையீரல் பாதிப்பு உள்ளதா என கண்டறியலாம்.
பொதுவாக நுரையீரல் செயல்பாடு, எப்.இ.வி.1 எனும் குறியீடு 35 வயதிற்கு மேல் ஒவ்வொரு ஆண்டும் 25 - 30 எம்.எல். குறைய வாய்ப்புண்டு.
70 வயதை தாண்டும் போது ஒவ்வொரு ஆண்டும் 60 எம்.எல்., அளவு குறையலாம்.
தங்களின் உயரம், வயது, பாலினம், வேறுபாட்டை பொறுத்து இக்குறியீடு மதிப்பும் வேறுபடும். வயது, இனம், உயரத்தை வைத்து நுரையீரல் செயல்பாடு எதிர்பார்ப்பை அறியலாம்.
'ஸ்பைரோமெட்ரி' பரிசோதனை மூலம் இந்த குறியீட்டு மதிப்பை சுவாச செயல்திறன் எவ்வளவு மில்லி, சதவீதம் என அறியலாம்.
இதில் குறைபாடு இருப்பின் டி.எல்.சி.ஓ., எப்.இ.என்.ஓ., ஏ.பி.ஜி., ஆறு நிமிட நடை பரிசோதனை மூலம் சுவாச செயல்திறனை அறியலாம்.