கொலஸ்ட்ரால் அதிகமாவது எப்படி? குறைக்க என்ன செய்யலாம்?

ரத்த கொலஸ்ட்ரால், உணவு கொலஸ்ட்ரால் (Dietary cholesterol) இரண்டும் வெவ்வேறு வகை சொற்கள், தாக்கங்கள் கொண்டவை.

உடல் பருமனுக்கு எல்லா நேரமும் கொலஸ்ட்ரால் நேரடி காரணம் இல்லை.

ரத்த கொலஸ்ட்ரால் என்பது நம் உடலில் (முக்கியமாக கல்லீரல்) உருவாகும் கொலஸ்ட்ரால். இது செல்களை நோக்கி ரத்தம் வாயிலாக செல்கிறது.

உணவின் மூலம் பெறப்படும் கொலஸ்ட்ரால் என்பது முட்டை மஞ்சள் கரு, இறைச்சி, பாலாடைக்கட்டி, எண்ணெய் பண்டங்கள் போன்ற உணவுகளிலிருந்து கிடைக்கிறது.

ஆனால் பலருக்கு உணவில் கிடைக்கும் கொலஸ்ட்ராலை விட உடலும் அதிகமாக தயார் செய்யும்.

ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பது தமனிகளில் கொழுப்பு படிமங்கள் உருவாகி மாரடைப்பு, பக்கவாதத்திற்கு அடிகோலும்.

உடல் பருமன் சரியாக இருந்தாலும், இந்தியருக்கு உடல் கொழுப்பின் சதவிகிதம் அதிகமாக இருக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

ரத்த கொழுப்பு அளவை குறைக்க உணவில் உப்பு, அதிகமான எண்ணெய், மாவுச்சத்து, துரித உணவுகளை குறைக்க வேண்டும்.

சீரான உடற்பயிற்சி, புகை, மதுப் பழக்கங்கள் வேண்டாம். முறையான மாத்திரைகள் எடுத்து கொண்டால் மாரடைப்பு, பக்கவாதம் வராமல் பாதுகாக்க முடியும்.