நடை பயிற்சி எவ்வளவு நேரம் மேற்கொள்ள வேண்டும்?

தினசரி 40 நிமிடம் உடம்பில் வியர்வை வரும் அளவிற்கு நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

மூன்று மாதத்திற்கு நடை பயிற்சி மேற்கொண்டால் உடலில் பல்வேறு மாற்றங்களை உணரலாம்.

ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவும்.

தேவையில்லாத கலோரியை குறைத்து ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு நடை பயிற்சி அவசியமாக கருதப்படுகிறது.

40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நடைபயிற்சி மிகுந்த பயன் தருவதோடு, அவர்கள் முடிந்த அளவிற்கு வெள்ளை உணவுகளை தவிர்க்க வேண்டும்.

வெள்ளை சர்க்கரை, உப்பு, அரிசி உள்ளிட்டவற்றை உணவில் தவிர்த்து விட்டு சிறு தானியங்களை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.