காலை உணவு எப்படி இருக்க வேண்டும்... இட்லி நல்ல தேர்வா?
காலையில் சாப்பிடும் சாப்பாடு புரதச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும்; 45 வயதிற்கு மேல் காலையில் தினமும் இட்லி சாப்பிடுவது தவறு என டாகர்கள் கூறுகின்றனர்.
அதிலும் சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் இருந்தால், காலை உணவு புரதம் நிறைந்ததாக இருப்பது அவசியம்.
ரத்தத்தில் சர்க்கரையை மெதுவாக அதிகரிக்கச் செய்யும், 'கிளைசீமிக் இன் டெக்ஸ்' குறைந்த உணவுகள் குறித்த ஆராய்ச்சி சென்னையில் நடந்தது.
இதில், அதிக புரதச் சத்துள்ள கொண்டைக் கடலை முதலிடம் பிடித்தது. இது, சர்க்கரையை வேகமாக ரத்தத்தில் கலக்க விடாது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உடைத்த கோதுமை ரவை உப்புமா இரண்டாம் இடத்தில் உள்ளது.
வேக வைத்த உருளைக்கிழங்கை சாப்பிட்டால், அடுத்த முக்கால் மணி நேரத்தில் அதிலுள்ள மாவுச்சத்து முழுதும் ரத்தத்தில் கலந்து விடும். அதை தவிர்க்கலாம்.
குறைந்த கிளைசீமிக் இன்டெக்ஸ் உள்ள காய் கறிகள், பழங்கள், உணவில் அதிகம் இடம் பெற அறிவுறுத்தப்படுகிறது.
இது தவிர முட்டை, நிலக்கடலை, பாதாம், சுண்டல், காய்கறி சூப் சாப்பிடலாம்.
வாரத்திற்கு ஓரிரு நாட்கள் இட்லி சாப்பிடலாம்; அதுவும் பாரம்பரிய அரிசி வகைகளில் தயாரித்த கருப்பு, சாம்பல், பிரவுன், சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும்.